நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தித்திவங்சா எல்.ஆர்.டி ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த ஆடவர் சடலம் கண்டெடுப்பு 

கோலாலம்பூர்: 

இன்று காலை வேளையில் தித்திங்சா எல்.ஆர்.டி ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த ஆடவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர் 

காலை 8.30 மணிக்கு தங்கள் தரப்புக்கு அவசர அழைப்பு கிடைத்ததாகவும் செந்தூல், தித்திவங்சா தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

இறந்த ஆடவர் சீனர் என்றும் அவர் மாற்றுத்திறனானி என்று முதற்கட்ட அறிவிப்பில் வெளியானது 

சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் 

பலியான நபர் கண் பார்வையற்றவர் என்றும் வழி தடுமாறி தண்டவாளத்தில் விழுந்திருக்கலாம் என்றும் மீட்புப்படை துறையினர் தெரிவித்தனர். 

இதனால் PWTC தித்திவங்சா, செந்தூல், செந்தூல் தீமோர் ஆகிய ரயில் நிலையங்களுக்கான எல்.ஆர்.டி ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கபட்டுள்ளதாக RAPID KL நிறுவனம் தெரிவித்தது

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset