
செய்திகள் மலேசியா
பண்டார் செந்தோசாவின் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்: டத்தோ அப்துல் ஹமித்
கிள்ளான்:
பண்டார் செந்தோசாவில் நிலவி வரும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரமாக தீர்வு காணப்படும்.
கிள்ளான் மாநகர் மன்றத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ஹமித் இதனை கூறினார்.
கிள்ளான் தாமான் செந்தோசா பண்டார் செந்தோசாவாக அந்தஸ்து உயர்த்தப்பட்டுள்ளது.
25 தாமான்கள் அதாவது குடியிருப்பு பகுதிகளை கொண்ட இடமாக தாமான் செந்தோசா விளங்குகிறது.
கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வாழ்கின்றனர்.
மருத்துவமனை, பள்ளிகள், ஆலயங்கள், வழிபாட்டுத் தளங்கள், வங்கிகள், எல்ஆர்டி ரயில், நெடுஞ்சாலைகள் என அனைத்தும் இங்கு உள்ளன.
ஆனால், இவ்விடம் மட்டும் தாமான் செந்தோசாவாக உள்ளது.
இதன் அடிப்படையில்தான் தாமான் செந்தோசாவை பண்டார் செந்தோசாவாக அந்தஸ்து உயர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது பண்டார் செந்தோசா அதிகாரப்பூர்வமாக அந்தஸ்து உயர்த்தப்பட்டுள்ளது.
இனி இங்குள்ள மக்கள் பண்டாரில் வாழவுள்ளனர். இவ்விடத்தின் தரமும் உயரவுள்ளது.
இத்திட்டம் மக்களுக்கு பெரும் பயனை அளிக்கும்.
இனி இங்குள்ள மக்கள் பண்டார் செந்தோசாவை பார்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக இப்பகுதியின் சுத்தத்தை மக்கள் பேணி காக்க வேண்டும். இதுவே எனது வேண்டுகோள் என்று அவர் கூறினார்.
இதனிடையே இந்த பண்டார் செந்தோசாவில் நிலவி வரும் வெள்ளப் பிரச்சினை தொடர்ந்து சர்ச்சையாகவே உள்ளது.
பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வு காணப்படும். அதற்காக 6 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்று டத்தோ அப்துல் ஹமித் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 22, 2025, 9:41 pm
ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷஹ்ருடின் காலமானார்
February 22, 2025, 5:45 pm
உருட்டல் மிரட்டலுக்கு அறவாரியமும் பேராக் மாநில அரசும் அடிபணியாது: சிவநேசன்
February 22, 2025, 5:40 pm
19ஆவது இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா 2025 அதிகாரப்பூர்வமாக தொடக்கம் கண்டது
February 22, 2025, 3:16 pm
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் சுழல் கிண்ணத்தில் மீபாவின் இளையோர் கால்பந்து போட்டி
February 22, 2025, 3:05 pm
ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டது
February 22, 2025, 3:03 pm
வாய் திறக்கும் ஒவ்வொரு முறையும் அன்வார் பொய் சொல்கிறார்: துன் மகாதீர்
February 22, 2025, 3:01 pm