நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மன அழுத்தம் காரணமாக மனைவியைக் கொலை செய்த வயதான கணவன்

பெட்டாலிங் ஜெயா: 

செராஸில் உள்ள பண்டார் சுங்கை லோங் பகுதியில் தனது மனைவியைக் கொலை செய்த வயதான கணவரான வர்த்தகர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

காஜாங் மாவட்ட காவல்துறை தலைவர் அப்துல் யூசோஃப் இதனை உறுதிப்படுத்தினார். பாதிக்கப்பட்ட மாதுவின் மகன் காவல்துறைக்குத் தெரிவித்து இந்த சம்பவத்தை கூறியுள்ளார் 

65 வயதான ஆடவர் ஒருவர் தன் மனைவியைக் கொலை செய்துவிட்டு தாமும் தற்கொலை செய்ய முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

63 வயது மாது ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் 

கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் சந்தேக நபர் பெரும் மன அழுத்தத்திற்கு உட்பட்டதால் தான் இந்த கொலை செய்ததாக காவல்துறை தரப்பு தெரிவித்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset