
செய்திகள் மலேசியா
பள்ளி மாணவர்கள் உட்படுத்திய விபத்து விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: பினாங்கு முதல்வருக்கு ஐபிஎப் மகஜர்
பட்டர்வொர்த்:
பள்ளி மாணவர்கள் உட்படுத்திய விபத்து விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பினாங்கு முதல்வருக்கு ஐபிஎப் கட்சியினர் மகஜர் வழங்கியுள்ளனர்.
ஐபிஎப் தேசிய தலைவர் டத்தோ லோகநாதன், ஐபிஎப் பினாங்கு மாநில தலைவர் ச. குமரேசனின் ஆலோசனை அடிப்படையில் பினாங்கு மாநில ஐபிஎப் கட்சியின் இளைஞர் பகுதி தலைவர் அருள்மணி அர்ஜுனன் தலைமையில் இரு தினங்களுக்கு இந்த மகஜர் வழங்கப்பட்டது.
அலுவல் காரணமாக முதலமைச்சர் வெளிநாட்டில் இருப்பதால் முதலமைச்சரின் சிறப்பு அதிகாரி ஜஹார் இந்த மனுவை பெற்றுக் கொண்டார்.
இந்த மனுவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காலை சுங்கை பக்காப் தமிழ் பள்ளி செல்லும் வழியில் கனரக வாகனத்துடன் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 வயது சிறுமி கவர்ஜித்தா முருகன் வலது காலை இழந்த நிலையில் அவரின் அண்ணன் டர்ஷன் முருகன் இடது கையில் பெரும் பாதிப்பிற்கு உள்ளானார்கள்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க மாநில முதலமைச்சர் என்ற முறையில் போலிஸ், போக்குவரத்து அமைச்சிடம் பள்ளி வளாகங்களை சுற்றியுள்ள பகுதியில் பள்ளி ஆரம்பம் ஆகும் நேரம், முடியும் நேரங்களில் இதுபோன்ற கனரக வாகனங்கள் செல்வதை தவிர்க்கவும் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று ஐபிஎப் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாநில இளைஞர் பகுதி தலைவர் அருள்மணி அர்ஜுனன், மாநில இளைஞர பகுதி பொறுப்பாளர்களுடன் ஐபிஎப் பினாங்கு மாநிலத் தலைவர் ச.குமரேசனும் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 22, 2025, 1:01 pm
மிசி திட்டத்தின் கீழ் இந்திய இளைஞர்களுக்கு ட்ரோன் பராமரிப்பு, பழுதுபார்க்கும் திறன் பயிற்சிகள்
February 22, 2025, 12:37 pm
மருத்துவ சிகிச்சை நிறைவுபெற்று தாயகம் திரும்பினார் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார்
February 22, 2025, 12:34 pm
தித்திவங்சா எல்.ஆர்.டி ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த ஆடவர் சடலம் கண்டெடுப்பு
February 22, 2025, 10:50 am
பண்டார் செந்தோசாவின் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்: டத்தோ அப்துல் ஹமித்
February 22, 2025, 10:44 am
மன அழுத்தம் காரணமாக மனைவியைக் கொலை செய்த வயதான கணவன்
February 22, 2025, 10:14 am
அமைச்சரவை திறந்த மனதுடன் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்: பிரதமர் அன்வார்
February 21, 2025, 6:45 pm
இனவெறி சர்ச்சையில் சிக்கிய சோள விற்பனையாளருக்கு 400 ரிங்கிட் அபராதம்: மனைவிக்கு சிறை
February 21, 2025, 6:44 pm
பள்ளிவாசலில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆடவர் கைது: போலிஸ்
February 21, 2025, 6:43 pm