நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரிக்பீல்ட்ஸ் துன் சம்பந்தன் வியாபார தலப் பிரச்சினைக்கு டத்தோ பண்டார் உரிய தீர்வை வழங்க வேண்டும்: டத்தோ கலைவாணர்

கோலாலம்பூர்:

பிரிக்பீல்ட்ஸ் துன் சம்பந்தன் வியாபார தலத்தில் நிலவி வரும் பிரச்சினைக்கு டத்தோ பண்டார் உரிய தீர்வை வழங்க வேண்டும்.

நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் இதனை வலியுறுத்தினார்.

கலைச்செல்வி வேலு என்பவர் கீழ்த்தளத்தில் 6 எண் கொண்ட கடையில் நான் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

கோவிட் 19 காலக்கட்டத்தில் அவரால் இங்கு வியாபாரம் செய்ய முடியாமல் போனது.

மேலும் அவரது கணவர் மாற்றுத் திறனாளி ஆவார். இப்போது மீண்டும் வியாபாரம் செய்ய வந்திருக்கிறார்.

ஆனால் அவர் கடையை இங்கு வியாபாரம் செய்யாத ஒருவருக்கு கொடுத்து விட்டார்கள்.

அதே போன்று சுமதி என்பவர் இங்கு பல ஆண்டுகளாக நாங்கள் வியாபாரம் செய்து வருகிறார்.

அவருக்கு கீழ்த்தளத்தில் 4 எண் கொண்ட கடை வழங்கப்பட்டது. ஆனால் அவருக்கு வேறு இடத்தில் கடை வழங்கப்பட்டுள்ளது.

தமக்கான கடையை பெறுவதற்கு அவர் 10 ஆண்டுகளாக போராடி வருகிறார்.

இப்படி இவ்விடத்தில் பல பிரச்சினைகள் உள்ளது. குறிப்பாக குண்டர் கும்பல் பிரச்சினையும் உள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் டத்தோ பண்டாருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. டத்தோ பண்டார் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்பார் என நம்புகிறேன்.

அதே வேளையில் இப்பிரச்சினை தொடர்பில் புக்கிட் அமானிலும் மகஜர் வழங்கப்படும் என்று டத்தோ கலைவாணர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset