நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இனவெறி சர்ச்சையில் சிக்கிய சோள விற்பனையாளருக்கு 400 ரிங்கிட் அபராதம்: மனைவிக்கு சிறை

சிப்பாங்:

இனவெறி சர்ச்சையில் சிக்கிய சோள விற்பனையாளருக்கு 400 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

சிப்பாங் மாவட்ட போலிஸ் தலைவர் ஷான் கோபால கிருஷ்ணன் இதனை கூறினார்.

சோள விற்பனையின் போது இனவெறி வார்த்தைகள் அடங்கிய அறிவிப்பு பலகையை வைத்ததற்கான சம்பந்தப்பட்ட கணவன் மனைவி கைது செய்யப்பட்டனர்.

இன்று சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவர்களுக்கு எதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை  அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அந்த வர்த்தகருக்கு நானூறு ரிங்கிட் அபராதம் விதித்தது.

அதே நேரத்தில் மனைவிக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தோனேசியாவைச் சேர்ந்த அவரது மனைவி, செல்லுபடியாகும் பயண ஆவணங்களை வைத்திருக்காததற்காக குடிவரவுச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர் இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

அகவே இது சம்பந்தமாக, இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பேணவும், இன, மத பதட்டங்களைத் தூண்டும் எந்த வகையான அறிக்கையையும் வெளியிட வேண்டாம் என்றும் ஷான் கோபால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset