நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விசாரணையில்  சிங்கப்பூரின் உதவி தேவை: எம்ஏசிசி அதிகாரி 

கோலாலம்பூர்:

டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் எதிர்கொள்ளும் 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை வழக்கு தொடர்பாக சிங்கப்பூரிடமிருந்து பரஸ்பர சட்ட உதவியைப் பெறுமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை அதிகாரி இன்று உயர் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு சவூதி அரேபிய அரண்மனையில், நன்கொடை அளித்ததாகக் கூறப்படும் இளவரசர் சவூத் அப்துல்அஜிஸ் அல்-சவூத்' உடனான சந்திப்பு இருந்தபோதிலும், 

மேலும் விசாரணை இது தேவை என்று முன்னாள் பிரதமரின் 1 எம்டிபி விசாரணையில் நஷாருதீன் அமீர் கூறினார்.

அவரும் அவரது சகாக்களான ஃபிக்ரி அப் ரஹீம் மற்றும் ஹஃபாஸ் நாசரும், தற்போதைய எம்ஏசிசி தலைவர்  அசாம் பாக்கி மற்றும் அப்போதைய துணை அரசு வழக்கறிஞர் சுல்கிஃப்லி அகமதுவும் மத்திய கிழக்கு நாட்டில் நான்கு நன்கொடை கடிதங்களை 
விசாரிக்க வந்திருந்தனர்.

2011 பிப்ரவரி 1 முதல் 2014 ஜூன் 1  வரையிலான தேதியிட்ட இந்தக் கடிதங்களில், சவுத் கையொப்பமிட்டு நஜிப்பிற்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset