நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயர் தவார் பொது சந்தையில்  மும்மொழிகளில் பெயர் பலகை; ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை: ஜசெக இளைஞர் தலைவர்

தெலுக் இந்தான்:

ஆயர் தவார் பொது சந்தையில்  மும்மொழிகளில் பெயர் பலகை வைக்கப்பட்டது ஒரு பிரச்சினையாகவே இருந்ததில்லை.

ஜசெக இளைஞர் தலைவர் வூ கா லியோங் இதனை வலியுறுத்தினார்.

பேரா தெலுக் இந்தானில் உள்ள ஆயர் தவார் பொது சந்தையின் பெயர் பலகை மூன்று மொழிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அச்சந்தையில் மலாய், சீனம், தமிழ் ஆகிய மொழிகளில் பெயர் பலகைகள் அமைக்கப்பட்டிருப்பதை பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மத் ஃபாட்லி ஒரு பிரச்சினையை எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் அவர் இரட்டை போக்குடன் நடந்து கொள்ளக் கூடாது.

இச்சந்தையில் கடந்த 2019 முதல்  மூன்று மொழிகளில் பெயர் பலகைகள் உள்ளன.

மேலும் பல்வேறு தரப்பினரால் சந்தை எப்போதும் பார்வையிடப்பட்டாலும், இதுவரை எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை.

ஆகவே அவர்  அரசியலை சரியான, தூய்மையான முறையில் செய்ய வேண்டும்.

பிரபலத்திற்கான மலிவான விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளால் நாட்டின் பன்முகத்தன்மையின் வலிமையைப் பாதிக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset