
செய்திகள் மலேசியா
மின்சாரக் கட்டணம் 14% உயர்வுக்கு மக்களும் பரவலாக எதிர்ப்புகளை வெளிப்படுத்த வேண்டும்: டத்தோ கலைவாணர்
கோலாலம்பூர்:
மின்சாரக் கட்டணம் 14% உயர்வுக்கு மக்களும் பரவலாக எதிர்ப்புகளை வெளிப்படுத்த வேண்டும்.
நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ கலைவாணர் இதனை வலியுறுத்தினார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமர் ஆவதற்கு முன் இன்று வெற்றி பெற்றால் நாளை பெட்ரோல் விலையை குறைப்பேன் என்று வீர வசனம் பேசினார்.
ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அவரால் பெட்ரோல் விலையை கூட கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில் மக்களுக்கு சுமையை கொடுக்கும் மின்சார கட்டண உயர்வை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பிரதமர் பேசினார். ஆனால் இப்போது மின்சார கட்டண உயர்வு காலத்தின் கட்டாயம் ஆகும்.
இது பொது மக்களை பாதிக்காது. பெரிய பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே மின்சார கட்டண உயர்வு இருக்கும் என்ன அவர் கூறியுள்ளார்.
மின்சார கட்டண உயர்வு விவகாரத்தில் நமது பிரதமர் மாற்றி மாற்றி பேசி வருகிறார். எது எப்படி இருந்தாலும் வரும் ஜூலை மாதம் மின்சார கட்டணம் 14% உயர்வு காண உள்ளது.
அரசாங்கத்தின் இந்த முடிவு இறுதியானது என கூறப்படுகிறது. மின்சார கட்டணம் உயர்ந்தால் அனைத்து பொருட்களின் விலைகளும் உயரலாம்.
ஏற்கனவே மக்கள் விலைவாசி அதிகரிப்பால் வாடி வதங்கி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மின்சார கட்டணம் அவர்களுக்கு மேலும் சுமையை கொடுக்கும்.
பெரிய நிறுவனங்களுக்கு தான் மின்சார கட்டணம் உயர்வு என்றாலும் அதன் தாக்கம் சாதாரண மக்களுக்கும் இருக்கும்.
ஆகவே மின்சார கட்டண உயர்வை அரசாங்கம் உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும்.
குறிப்பாக எதிர்க்கட்சியாக இருக்கும் போது பேசிய தலைவர்கள் எல்லாம் இப்போது இந்த மின்சார கட்டணத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
அதேபோன்று எதிர்க்கட்சியில் உள்ள தலைவர்களும் இதுகுறித்து பேச வேண்டும்.
இறுதியாக மக்கள் இந்த சுமையை தடுத்து நிறுத்த பரவலாக எதிர்ப்புகளை வெளிப்படுத்த வேண்டும்.
யார் ஆட்சிக்கு வந்தாலும் நமது உரிமைக்காக நாம் மட்டுமே அவரிடம் வேண்டும். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று டத்தோ கலைவாணர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 11:14 am
வாகன மீட்பு முகவரின் அராஜகம்: அனுமதியை ரத்து செய்த அமைச்சு
July 16, 2025, 10:50 am
நியூசிலாந்து நாட்டின் உயர் அதிகாரிகளுடன் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி சந்திப்பு
July 16, 2025, 10:26 am
கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் லாரி தீப்பிடித்து எரிந்தது கடுமையாக போக்குவரத்து நெரிசல்
July 16, 2025, 10:21 am
நாட்டிற்குள் சட்டவிரோதமாக ஆட்களை கொண்டு வரும் இரண்டு வங்கதேச ஆடவர்கள் கைது
July 16, 2025, 10:12 am
இனம் பார்க்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு தடைவிதிக்க வேண்டும்: இளைஞர்கள் கருத்து
July 16, 2025, 9:49 am