நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மகள்  தவனேஸ்வேரி மரணம் குறித்து போலிசார் வேறு கோணத்தில் விசாரிக்க வேண்டும்: தாயார் கோரிக்கை

கோலாலம்பூர்:

மகள் தவனேஸ்வேரி மரணம் குறித்து போலிசார் வேறு கோணத்தில் விசாரிக்க வேண்டும்.

தவனேஸ்வரியின் தாயாரான 43 வயது ஏ. லலிதா இதனை கூறினார்.

கடந்த ஜூலை 2 ஆம் தேதி செந்தூலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது மாடியில் இருந்து விழுந்து தவனேஸ்வேரி மரணமடைந்தார்.

என் மகள் தவனேஸ்வேரி மோகனின் (20) மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. என் மகளுக்கு  நீதி வேண்டும். அவளுக்கு நடந்ததை என்னால் மறக்க முடியாது.

ஒவ்வொரு நாளும் நான் போலிஸ் நிலையம் முன் கண்ணீருடன் நிற்கிறேன். என் மகளுக்கு நீதி கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் நிற்காது என்று அவர் சோகத்துடன் கூறினார்.

முன்னதாக தவனேஸ்வரியின் மரணத்தில் எந்த குற்றவியல் கூறுகளும் இல்லை என்பதை ஆரம்ப விசாரணைகள் காட்டியதாக செந்தூல் மாவட்ட போலிஸ்  தலைவர் ஏசிபி அகமது சுகர்னோ முகமது ஜஹாரி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தவனேஸ்வரி உள்ளூர் கல்லூரியில் போலிஸ், குற்றவியல் விசாரணையில் டிப்ளோமா படித்து வந்தார். அவர்  அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது மாடியில் வசித்து வந்தார்.

அது கல்லூரி மாணவர்களுக்கான தங்குமிடமாக வாடகைக்கு எடுக்கப்பட்டது. அங்கு தான் அவர் மரணமடைந்தார்.

எனது மகளின் மரணம் ஒரு மாணவியின் இழப்பு மட்டுமல்ல, ஒரு நம்பிக்கையின் இழப்பும் கூட.

வேறு எந்த தாயும் இதை அனுபவிக்க வேண்டியதில்லை. வேறு எந்த மாணவியும் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறக்கக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset