நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெற்றி மட்டும் முக்கியமல்ல, நட்பு முக்கியம்: பார்வையற்ற நண்பனோடு மாரத்தானை ஓட்டத்தை நிறைவு செய்த இளைஞர்

கோலாலம்பூர்: 

சில மாரத்தான் போட்டிகள் வெற்றிக்கான ஓட்டமாக இல்லாமல் நட்பிற்கும் நம்பிக்கைக்கும் ஓர் களமாக அமைகின்றன.

அவ்வகையில் அண்மையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் தனது சக பார்வையற்ற நண்பனை இறுதிவரை வழிநடத்தை ஓட்டத்தை நிறைவு செய்த  Ammar Naim என்ற இளைஞரின்செயல் இதற்கு சான்றாக அமைந்துள்ளது. 

Aida Shafit என்ற டிக் டாக் பக்கத்தில் பகிரப்பட்ட காணொலியில், Ammar Naim, அவரது பார்வையற்ற நண்பன் Adry Fazmi-யின் கையைத் தன்னுடன் சேர்த்து இணைத்து கொண்டு 21 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்துள்ளதைக் காணமுடிந்தது.

அதுமட்டுமல்லாமல், செல்லும் வழியில் பார்வையற்ற தன் நண்பனுக்கு சிறிய காயம் ஏற்பட்ட போது அவரை  Ammar Naim அரவணைக்கும் காட்சி இணையவாசிகளின் மனங்களை வென்றுள்ளது.

சரியான ஆதரவு இருந்தால் மாற்றுத்திறனாளிகள் கூட மிகப்பெரிய சாதனைகளை அடைய முடியும் என்பதை Ammar Naim செயல் தெளிவாக காட்டுகிறது என்று இணையவாசிகள் கருத்து பகிர்ந்துள்ளனர். 

அவர் தான் உண்மையான வெற்றியாளர். சில நேரங்களில் போட்டியில் வெல்வதை விட வாழ்கையில் பெற்றுவது சிறந்ததது என்றும் இன்னும் சிலர்  Ammar Naim-யைப் பாராட்டியுள்ளனர். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset