நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வார் விலக வேண்டும் பேரணிக்கு ஆதரவாளர்களைத் திரட்ட பெர்சத்து கட்சி முடிவு செய்துள்ளது: அஸ்மின் அலி

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் அன்வார் விலக வேண்டும் பேரணிக்கு  ஆதரவாளர்களைத் திரட்ட பெர்சத்து கட்சி முடிவு செய்துள்ளது.

பெர்சத்து கட்சியின் தலைமை செயலாளர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி இதனை கூறினார்.

அரசாங்கக் கூட்டணிக்கு வெளியே உள்ள கட்சிகளுடன் ஒரு ஐக்கிய எதிர்க்கட்சி முன்னணியை உருவாக்குவதற்கான முயற்சிகளை வழிநடத்தும் ஆணையை பெர்சத்து உச்சமன்றத்தில் அதன் தலைவர் டான்ஶ்ரீ மொஹைதின் யாசின் ஒப்புக் கொண்டுள்ளார்.

இது பொது நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில் பொதுவான நிலைப்பாட்டை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள தேசியக் கூட்டணி உச்சமன்றக் கூட்டத்தில் இந்த திட்டம் தாக்கல் செய்யப்படும்.

அதே வேளையில் வரும் ஜூலை 26ஆம் தேதி கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேகாவில் அன்வார் விலக வேண்டும் என்ற பேரணி நடத்தப்படவுள்ளது.

இந்த  பேரணியில் ஆதரவாளர்களைத் திரட்டவும் கட்சி முடிவு செய்துள்ளது.

கொடுங்கோன்மையிலிருந்து மக்களை விடுவித்து, அரசியலமைப்பு,  நாட்டின் சட்டங்களை நிலைநிறுத்துவதற்கான போராட்டத்திற்காக அமைதியாக ஒன்றுகூடுவதற்கு அனைத்து மட்டத் தலைமைகளிலும் பொதுமக்களிலும் ஒரு அணி திரள வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset