நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டிற்குள் சட்டவிரோதமாக ஆட்களை கொண்டு வரும் இரண்டு வங்கதேச ஆடவர்கள் கைது

புத்ராஜெயா:

நாட்டிற்குள் சட்டவிரோதமாக ஆட்களை கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக நம்பப்படும் இரண்டு வங்கதேச ஆடவர்களை எம்ஏசிசி  கைது செய்துள்ளது.

வெளிநாட்டில் உள்ள ஒரு சுற்றுலா நிறுவனத்தின் இயக்குனர் உட்பட இரண்டு பேர் இந்நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எம்ஏசிசி அதிகாரிகள் நடத்திய சோதனையில்  50 வயதுடைய இருவரும், நெகிரி செம்பிலான், தலைநகரைச் சுற்றி நேற்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை கைது செய்யப்பட்டனர்.

கேஎல்ஐஏ முனையம் 1இல் அமலாக்க அதிகாரிகளுக்கு இவர்கள்  கையூட்டு கொடுத்ததாக ஆரம்ப விசாரணைகள் கூறுகின்றன.

வெளிநாட்டினர் நுழையும்போது அவர்களைச் சரிபார்க்கும் செயல்முறையை எளிதாக்குவதற்காக எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள கேஎல்ஐஏ 1இல் உள்ள அமலாக்க அதிகாரிகளை அணுகுவதே இவர்களின் செயல்பாடாகும்.

கைதான இருவர் ஜூலை 20ஆம் தேதி வரை தடுப்பு காவலில் வைக்கப்படுவதாக  புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் மூத்த பதிவாளர் ஷேக் ஜூலாட்ரூஸ்  உத்தரவைப் பிறப்பித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset