நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு மருத்துவமனைகளில் தாதியர்கள், நிபுணர்கள் கடுமையாகப் பற்றாக்குறை – நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலம்

கோலாலம்பூர் 
மலேசியாவின் அரசு மருத்துவமனைகள் தற்போது கடுமையான மனிதவளக் குறைவால் பாதிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் நிபுணர்கள் போன்ற முக்கியமான சுகாதார பணியாளர்கள் தேவைக்கு மனிதவள பற்றாகுறையால், நாடு முழுவதும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

பணியாளர்கள் மீதான வேலைச்சுமை அதிகமாக இருப்பதால், அவர்கள் தொடர்ந்து பலமுறை கடமையில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் சோர்வடைந்து வருகிறார்கள் இப்போது பெரும் சிக்கலாக மாறியுள்ளது.

மலேசியாவில் இவ்வாண்டு 90,000 மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்ற தேசிய இலக்கு உள்ள நிலையில், தற்போது உள்ள மருத்துவர்கள் எண்ணிக்கை 71,000.

அதேபோல், நிபுணர்களில் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது தற்போதைய தேவை 18,000 ஆக இருந்தாலும், பணியாற்றுபவர்கள் எண்ணிக்கை 7,500-ஐ தாண்டுவதில்லை. பெரும்பாலான சிகிச்சைப் பிரிவுகளிலும் தேவையான நிபுணர்கள் பாதியாகவே உள்ளனர்.

இதனிடையே தாதியர்களின் நிலைமை மேலும் மோசமானதாகும். நாட்டில் சுமார் 8,000 தாதியர்கள் குறைவாக உள்ளனர். சில பரபரப்பான மருத்துவமனைகளில், ஒரு தாதி 10 முதல் 16 நோயாளிகள் வரை கவனிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், சுகாதாரத் தரத்திற்கேற்ப ஒரு தாதிக்கு அதிகபட்சம் ஆறு நோயாளிகள் என்றே சரியான அளவாகக் கருதப்படுகிறது.

தாதிகளுக்கு இருந்த கடமைகள் மட்டும் போதாமல், மருந்தகங்களில் மருந்து எடுப்பது, பதிவேடுகள் நிரப்புவது, தரவுகள் தொகுப்பது, கண்காணிப்பு பணிகள் என அலுவலக வேலைகளும் ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து அவர்கள் உடலும் மனதுமாக சோர்வடையக் காரணமாகியுள்ளது.

சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் இந்நிலைமை மேலும் மோசமானதாக உள்ளது. அந்தப் பகுதிகளில் மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை குறைவதோடு, புவியியல் தனித்தன்மை, போக்குவரத்து வசதியின்மை, தொழில்நுட்ப ஆதரவு இல்லாமை, மேலும் குறைந்த பயிற்சித் திட்டங்கள் ஆகியவையும் தடையாக உள்ளன.

இந்தப் பிரச்சனையை சரிசெய்ய, அந்த மாநிலங்களுக்கு தனி சுகாதாரத் துறையை நிர்வகிக்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என்றும், மாநிலத்திற்கேற்ப திட்டமிடப்பட்ட முதலீடுகள், ஊக்கத்தொகைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் சுகாதாரக் கூட்டமைப்புகள் வலியுறுத்துகின்றன.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset