நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இனம் பார்க்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு தடைவிதிக்க வேண்டும்: இளைஞர்கள் கருத்து

கோலாலம்பூர் 
இனம் சார்ந்த வீடு வாடகை முறைகளை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதில், 18 முதல் 24 வயதுக்குள் உள்ள மலேசிய இளைஞர்களே அதிக ஆதரவு வழங்குவது அணமைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

YouGov நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 1,104 பேரிடம் கருத்து சேகரிக்கப்பட்டது. அதில் இளம் வயதினர் (18–24) மட்டுமே, “வீடு வாடகைக்கு கொடுப்பதில் இனவெறி இருக்கக் கூடாது, அதற்கெதிராக சட்டம் வேண்டும்” என்று அதிகமாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மாறாக, 35 முதல் 54 வயதுக்குட்பட்டோர் பெரும்பாலானவர்கள் (58.7%) வீடு வாடகையாளர்களை இனம் பார்த்தே தேர்ந்தெடுக்க வீட்டின் உரிமையாளருக்கு முழுமையான உரிமை இருக்க வேண்டும் என நம்புகிறார்கள்.

வசதி வாடகைச் சட்டம் / வீட்டு வாடகை ஒப்பந்தச் சட்டத்திற்கு (RTA) மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.. ஆனால் இனவெறி தடுப்பதில் கருத்து பிளவும் நிலவுகின்றது.

சட்ட முறையில் வீடு வாடகை சந்தையை கட்டுப்படுத்தும் இச்சட்டம் பற்றிய விருப்பம் பெரும்பாலான மக்களிடமும் உள்ளது. மொத்த மக்களில் 57% பேர் இந்தச் சட்டத்தை வரவேற்கின்றனர், வெறும் 10% பேர் மட்டுமே எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்தச் சட்டத்தில் “இனம் பார்க்கும் போக்குக்கு எதிரான வரம்புகள் இருக்கவேண்டும்” என்ற நிபந்தனை பற்றி மக்களின் கருத்துகள் பிளவுபட்டுள்ளன.

மொத்தமாக 31% பேர் மட்டுமே இனம் சார்ந்த வாடகை முறைக்கு சட்டம் தலையிட வேண்டுமென கூறியுள்ள நிலையில், கிட்டத்தட்ட பெரும்பாலான மக்கள் இன்னும் வீட்டுதாரர்களுக்கு இனத்தின் அடிப்படையில் வாடகையாளர்களைத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்க வேண்டும் என்றே நம்புகிறார்கள்.

இந்த ஆய்வில், வீடு வாடகையில் மிக அதிகமாக இனவெறி பாதிப்புக்கு உள்ளாகும் குழுவாக மலேசிய இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒவ்வொரு 5 பேரில் 2 பேர், வீடு வாடகைக்கு முயன்றபோது இனம் பார்த்த மறுப்பு சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இனம் பார்க்கும் வாடகை முறைக்கு எதிராக 63.8% இந்தியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல், முழுநேர மாணவர்கள் (42%) மற்றும் இளம் வயதினர் (39%) ஆகியோரும் ஆதரவு அதிகம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset