நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம் 

இஸ்லாமாபாத்:

ஆப்கன் அகதிகள் அனைவரையும் தங்கள் நாட்டை விட்டு வெளியேற்ற பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாக இஸ்லாமாபாதில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் எச்சரித்துள்ளது.

பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள அனைத்து ஆப்கன் அகதிகளையும் வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை மிக விரைவில் தொடங்கப்படவுள்ளது.

ஏற்கெனவே, தலைநகா் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஆப்கன் நாட்டவா்கள் உரிய ஆவணங்கள் இருந்தாலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனா். 

அவா்களின் வசிப்பிடங்களில் தேடுதல் நடவடிக்கைகள், கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எந்த முன்னறிவிப்பும் இன்றி அகதிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிடுகின்றனா் என்று அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

1979-89 காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்திருந்தபோது அங்கிருந்து ஏராளமான அகதிகள் பாகிஸ்தானில் தஞ்சமடைந்தனா். அதன் பிறகு நடைபெற்ற போா்களின்போதும் ஆப்கன் அகதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்துவந்தது.

இந்த நிலையில், நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள அனைத்து அகதிகளும் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு கடந்த 2023-இல் உத்தரவிட்டது. அதன்படி, சுமாா் 8.6 லட்சம் அகதிகள் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset