நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஸ்பிஎம் தேர்வில் மூன்று கிரெடிட்கள் பெற்றவர்கள் தாதியர் பயிற்சிக்கு அனுமதிப்பது அதன் தரத்தைப் பாதிக்காது: ஜுல்கிஃப்லி அஹமத்

கோலாலம்பூர்:

எஸ்பிஎம் தேர்வில் மூன்று கிரெடிட்கள் பெற்றவர்கள் தாதியர் பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்ற தளர்வு அதன் தரத்தை பாதிக்காது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ  ஜுல்கிஃப்லி அஹமத் தெரிவித்தார்.

தாதியர் பயிற்சித் திட்டத்தின் பாடத்திட்டம் மாறாமல் இருப்பதால் பகுப்பாய்வு திறன்கள், விமர்சன சிந்தனையில் மாற்றம் இருக்காத் என்று அவர் கூறினார்.

தாதியர் துறையில் எஸ்பிஎம் முடித்த மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கே இந்தத் தளர்வு அமல்படுத்தப்பட்டது.

கடன் தேவையை ஐந்திலிருந்து மூன்றாகக் குறைப்பது என்று அமைச்சகம் நம்புகிறது.

இந்தத் தளர்வு மலேசியாவின் தாதியர் துறைகளுக்கான டிப்ளோமா திட்டங்களின் சர்வதேச அங்கீகாரத்தை பாதிக்காது. 

பொது, தனியார் துறைகளில் தாதியர்கள் பற்றாக்குறை நெருக்கடியை அமைச்சகம் எதிர்கொள்கிறதா என்று மாஸ் காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் மோர்சி பிமோல் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, அமைச்சகத்தில் 9,585 தாதியர் பணிக்கான காலியிடங்கள் இருப்பதாகவும், தனியார் மருத்துவமனைகளில் 3,493 காலியிடங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset