நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில்  அதிகரித்துள்ள அவதூறு அரசியலை நேர்மையுடன் எதிர்த்து போராட வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

நாட்டில்  அதிகரித்துள்ள அவதூறு அரசியலை நாம் நேர்மையுடன் எதிர்த்து போராட வேண்டும்.

தொழில் முனைவோர் மேம்பாடு  கூட்டுறவு துணையமைச்சரும் கெஅடிலான் உதவித் தலைவருமான டத்தோஸ்ரீ ரமணன் இதனை கூறினார்.

இந்த நாட்டில் அவதூறு அரசியல் கவலையளிக்கும் நிலையை எட்டியுள்ளது.

இதை நாம் சரி செய்ய வேண்டும். மேலும் தைரியத்துடனும் நேர்மையுடனும் அதை எதிர்த்து போராட வேண்டும்.

இங்கும் அங்கும் கிசுகிசுக்காதீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால், முன்வாருங்கள்.

அதிகாரத்தைத் தொடர நீங்கள் மிகவும் ஆசைப்படுவதால், நாட்டையோ அல்லது தனிநபர்களையோ களங்கப்படுத்தும் கதைகளை உருவாக்காதீர்கள்.

உண்மையாக இருந்தால் தைரியமாக இருக்கு வேண்டும். இதறகு நான் பயப்படவில்லை. நான் வெளிப்படையாகச் சொல்ல விரும்பும் ஒருவர்.

அவதூறு என்ற பரவலான நிகழ்வுக்கு எதிராக நாம் ஒன்றுபட வேண்டும்

ஷாஆலமில் நடந்த சிலாங்கூர் கெஅடிலான் தலைமையுடனான கருத்தரங்கில் கலந்து கொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.

இந்த நாட்டில் யாருக்கும் குரல் கொடுக்க உரிமை உண்டு. அது ஜனநாயக செயல்முறையின் ஒரு பகுதியாகும்.

ஆனால் அரசியல் கவனம் பெற உண்மைகளை திசை திருப்பத தவறான செயல்முறையை பயன்படுத்த வேண்டாம்.

கட்சியை வலுப்படுத்த கட்சி உறுப்பினர்கள் முன்னேற வேண்டும். கடந்து போனதைப் பற்றி யோசிக்க வேண்டாம்.

அரசியல் நிலைத்தன்மை நாட்டிற்கு போதுமானது. இந்தக் கட்சி நமது கட்சி, நமது வீடு.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையில் நாம் ஒன்றாக அதைப் பாதுகாப்போம் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset