நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

98ஆம் ஆண்டு அன்வார் அம்னோவிலிருந்து வெளியேறியது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கலாம்: ரபிசி எச்சரிக்கை

கோலாலம்பூர்:

கடந்த 1998ஆம் ஆண்டு டத்தோஶ்ரீ அன்வார் அம்னோவிலிருந்து வெளியேறியது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கலாம்.

அக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரபிசி ரம்லி இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

கெஅடிலான் கட்சியின் அடிமட்டத்தில் கடுமையான அதிருப்தி வளர்ந்து வருகிறது.

சமீபத்திய கெஅடிலான் தேர்தலில் வாக்களிக்கும் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதே கட்சியில் அதிருப்திக்குக் காரணம்.

இந்த அதிருப்தி நீடித்தால் பலர் கட்சியை விட்டு வெளியேறலாம்.

ஏன் கடந்த 1998ஆம் ஆண்டு டத்தோஶ்ரீ அன்வார் அம்னோவில் இருந்து வெளியேறியது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கலாம்.

ஆக கட்சியின் தலைமைத்துவம் இந்த விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும் என ரபிசி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset