
செய்திகள் மலேசியா
பத்துமலையின் ஒவ்வொரு படியிலும் ஒரு திருப்புகழ் என 272 திருப்புகழ் பாடும் விழா நாளை நடைபெறுகிறது: டத்தோ சிவக்குமார்
பத்துமலை:
பத்துமலையின் ஒவ்வொரு படியிலும் ஒரு திருப்புகழ் என 272 திருப்புகழ் பாடும் விழா நாளை அதிகாலை நடைபெறுகிறது.
மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
டாக்டர் பண்பரசி கனிமொழி சங்கீத கலாலய இசை அகாடமி ஏற்பாட்டில் பத்துமலையில் பாடி பாடி உந்தன் பாதம் பணிந்தோம் முருகா எனும் தலைப்பில் திருப்புகழ் பாராயணம் நடைபெறவிருக்கிறது.
நாளை அதிகாலை 4.30 மணியளவில் இந்த விழா தொடங்குகிறது.
காலை 11.30 மணியளவில் நிகழ்ச்சி நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த விழாவில் பத்துமலையின் ஒவ்வொரு படியிலும் ஒரு திருப்புகழ் என 272 திருப்புகழ் பாடப்படவுள்ளது.
சங்கீத கலாலய இசை அகாடமியின் டாக்டர் பண்பரசி கோவிந்தசாமி, கனிமொழி தலைமையில் இவ்விழா நடைபெறவுள்ளது.
அவர்கள் தலைமையில் 22 பாடகர்கள் இந்த நிகழ்ச்சியில் திருப்புகழை இடைவிடாது பாடி வரவுள்ளனர்.
இந்த ஆன்மிக முயற்சி மலேசிய சாதனை புத்தகத்திலும், ஆசியான் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெறவுள்ளது.
இதுவொரு மகத்தான முயற்சியாகும். இம்முயற்சிக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.
குறிப்பாக நமது உள்ளூர் படைப்பாளிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று டத்தோ சிவக்குமார் கேட்டு கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 10:28 pm
நாட்டில் அதிகரித்துள்ள அவதூறு அரசியலை நேர்மையுடன் எதிர்த்து போராட வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
July 18, 2025, 3:34 pm
நிக் அடம்ஸ் நியமனம் குறித்து முடிவு செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது: பிரதமர் அன்வார்
July 18, 2025, 3:33 pm