
செய்திகள் மலேசியா
மக்களை ஆச்சரியப்படுத்தும் முக்கிய அறிவிப்பு; திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமையில் அறிவிக்கப்படும்: பிரதமர்
பெர்மாத்தாங் பாவ்:
மலேசிய மக்களை ஆச்சிரியப்படுத்தும் முக்கிய அறிவிப்பு திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமையில் அறிவிக்கப்படும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
விரைவில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும்.
ஒருவேளை அடுத்த திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை முன்னதாகவே இது அறிவிக்கப்படலாம்.
இந்த அறிவிப்பின் தாக்கம் மக்களுக்கு உண்மையிலேயே பயனளிக்கும்.
இதை உறுதி செய்வதற்காக, நிதி அமைச்சகக் குழு தற்போது அதன் விவரங்களை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதற்கான ஒரு வழியை நான் கண்டுபிடித்துள்ளேன்.
ஒவ்வொரு வாரமும் நிதியமைச்சரின் குழு பிரதமர் குறுகிய காலத்தில் என்ன அறிவிக்க முடியும் என்பதைத் தேடிக்கொண்டிருக்கிறது.
மேலும் இந்த அறிவிப்பு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைச் சமாளிக்க வகையில் இருக்க வேண்டும்.
ஆக திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை ஆச்சரியத்திற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 19, 2025, 9:08 pm
ஜோ லோ ஷாங்காயில் இருப்பதாக மலேசியாவுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை: பிரதமர்
July 19, 2025, 9:08 pm
மக்களின் பணத்தை திருடவில்லை என்பதால் ராஜினாமா செய்ய மாட்டேன்: பிரதமர்
July 19, 2025, 5:04 pm
KLIA, ஜொகூர் சோதனைச் சாவடிகளில் தடங்கல்: ஆயிரக்கனக்கான பயணிகள் பாதிப்பு
July 19, 2025, 10:14 am
மறைந்த டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலுவிற்கு மஇகா மத்திய செயலவை மௌன அஞ்சலி
July 19, 2025, 10:12 am