
செய்திகள் மலேசியா
கால்பந்து போட்டி உட்பட இந்தியர்கள் பொதுவில் ஒன்று கூடும் இடங்களில் மதுவை தவிர்க்க வேண்டும்: டத்தோ டி. மோகன்
சிரம்பான்:
கால்பந்து போட்டி உட்பட இந்தியர்கள் பொதுவில் ஒன்று கூடும் இடங்களில் மதுவை அடியோடு தவிர்க்க வேண்டும்.
சுக்கிம் தலைவர் டத்தோ டி. மோகன் இதனை வலியுறத்தினார்.
எம்ஆர்எம் கால்பந்து கிளப்பின் ஏற்பாட்டில் வெட்ரன் கால்பந்து போட்டி சிரம்பான் ஐஆர்சி அரங்கில் நடைபெறுகிறது.
கிட்டத்தட்ட 16 அணிகள் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளன.
நமது இந்திய சமுதாயம் ஒற்றுமையாக ஒரு இடத்தில் கூடி ஆரோக்கியமாக கால்பந்து விளையாடுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
இந்நிலை தொடர வேண்டும். குறிப்பாக இந்திய சமுதாயத்திடையே ஒற்றுமை மேலோங்க வேண்டும்.
இதுபோன்று இந்தியர்கள் ஒன்றுக் கூடும் இடங்களில் மதுவை அடியோடு தவிர்க்க வேண்டும்.
அது மரணங்கள் நிகழ்ந்த வீடாக இருந்தாலும் அது தவிர்க்கப்பட வேண்டும்.
இந்நிலையில் நெகிரி செம்பிலானில் பொது இடங்களில் மது அருந்தினால் 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவை நான் வரவேற்கிறேன்.
மேலும் உலகத்திறகு நாகரீகத்தை கற்றுக் கொடுத்த நமக்கு கட்டொழுங்கு மிகவும் முக்கியம்.
இவ்வேளையில் இப்போட்டியை வெற்றிகரமாக நடத்தும் எம்ஆர்எம் கிளப்பின் தலைவர் ஹசிமா, துணைத் தலைவர் லத்திவ் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள் என்று டத்தோ டி. மோகன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 19, 2025, 9:08 pm
ஜோ லோ ஷாங்காயில் இருப்பதாக மலேசியாவுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை: பிரதமர்
July 19, 2025, 9:08 pm
மக்களின் பணத்தை திருடவில்லை என்பதால் ராஜினாமா செய்ய மாட்டேன்: பிரதமர்
July 19, 2025, 5:04 pm
KLIA, ஜொகூர் சோதனைச் சாவடிகளில் தடங்கல்: ஆயிரக்கனக்கான பயணிகள் பாதிப்பு
July 19, 2025, 10:14 am
மறைந்த டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலுவிற்கு மஇகா மத்திய செயலவை மௌன அஞ்சலி
July 19, 2025, 10:12 am