நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலையில் முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்படும் அபூர்வ இசை யாத்திரை: டத்தோஸ்ரீ சரவணன்

பத்துமலை:

பத்துமலையில் முருகப் பெருமானுக்கு  அபூர்வ இசை யாத்திரை அர்ப்பணிக்கப்படுகிறது.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

பத்துமலையின் ஒவ்வொரு படியிலும் ஒரு திருப்புகழ் என 272 திருப்புகழ் பாடும் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

டாக்டர் பண்பரசி, கனிமொழி ஆகியோரின் சங்கீத கலாலய மாணவர்கள் 7 மணி நேர திருப்புகழ் கச்சேரி வழங்கி வருகின்றனர்.

மொத்தம் 272 திருப்புகழ்கள். 

இது முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அபூர்வ இசை யாத்திரை.

இந்நிகழ்வு மலேசிய சாதனைப் புத்தக பதிவு முயற்சியாக மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடக்கி வைத்ததில் நான் மகிழ்ச்சி  அடைகிறேன்.

இது பக்தியும்  இசையும் இணைந்த ஒரு மறக்க முடியாத தருணம் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset