
செய்திகள் மலேசியா
மலேசிய இந்து சங்கத்தில் புதிய மறுமலர்ச்சியை பேராளர்கள் நாளை ஏற்படுத்த வேண்டும்: முனியாண்டி
கோலாலம்பூர்:
மலேசிய இந்து சங்கத்தில் புதிய மறுமலர்ச்சியை பேராளர்கள் நாளை ஏற்படுத்த வேண்டும்.
சங்கத்தின் உச்சமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிடும் முனியாண்டி கூறினார்.
மலேசிய இந்து சங்கம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் ஆகிறது. 60 ஆண்டுகளாகி இருந்தாலும் இந்து சங்கம் இன்னமும் வலுவான சக்தியாக இல்லை.
பல்வேறு சர்ச்சைகளால் மலேசிய இந்து சங்கம் தொடர்ந்து பின்னடவைத்தான் எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலை மாற வேண்டும். மலேசிய இந்து சங்கம் மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்க வேண்டும்.
குறிப்பாக இந்து சமயம், கல்வி, ஆலயம் என்றாலே அதற்கு மலேசிய இந்து சங்கம் தான் பிரதிநிதி என்ற நிலை உருவாக வேண்டும்.
இதற்கு மலேசிய இந்து சங்கத்தில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும்.
இதன் அடிப்படையில் தான் கணேஷ் பாபு தலைமையில் மாறுவோம் மாற்றுவோம் அணியில் நான் உச்சமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறேன்.
ஆக நாளை பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் நடைபெறும் சங்கத் தேர்தலுக்கு அனைத்து பேராளர்களும் திரளாக வந்த சிறந்த தலைமைத்துவத்தை தேர்வு செய்ய வேண்டும்.
மாறுவோம், மாற்றுவோம் அணி கொடுக்கும் அனைத்து வாக்குறுதிகளையும் காப்பாற்றுவோம் என்று முனியாண்டி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 19, 2025, 9:08 pm
ஜோ லோ ஷாங்காயில் இருப்பதாக மலேசியாவுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை: பிரதமர்
July 19, 2025, 9:08 pm
மக்களின் பணத்தை திருடவில்லை என்பதால் ராஜினாமா செய்ய மாட்டேன்: பிரதமர்
July 19, 2025, 5:04 pm
KLIA, ஜொகூர் சோதனைச் சாவடிகளில் தடங்கல்: ஆயிரக்கனக்கான பயணிகள் பாதிப்பு
July 19, 2025, 10:14 am