
செய்திகள் மலேசியா
தரவு மைய திட்ட ஊழலில் தொடர்புடைய சந்தேக நபர் கிட்டத்தட்ட 1 மில்லியன் ரிங்கிட்டை எரிக்கத் துணிந்துள்ளார்
புத்ராஜெயா:
தரவு மைய திட்ட ஊழலில் தொடர்புடைய சந்தேக நபர் கிட்டத்தட்ட 1 மில்லியன் ரிங்கிட்டை எரிக்கத் துணிந்துள்ளார்.
எம்ஏசிசி செயல்பாட்டுப் பிரிவுன் துணைத் தலைமை ஆணையர் அஹ்மத் குசாய்ரி யஹ்யா இதனை உறுதிப்படுத்தினார்.
எம்ஏசிசி தரவு மைய கட்டுமான திட்ட டெண்டரை வாங்குவதில் ஊழலில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒரு சந்தேக நபரின் வீட்டில் சோதனை நடத்தியது.
இந்த சோதனையின் போது எரிக்கப்பட்ட கிட்டத்தட்ட 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 100 ரிங்கிட் நோட்டுகள் கண்டுபிடித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை இங்குள்ள தனது வீட்டில் ஊழல் தடுப்பு நிறுவனம் நடத்திய சோதனையால் அதிர்ச்சியடைந்த ஒரு முன்னணி கட்டுமான நிறுவனத்தின் திட்ட மேலாளரான அவர் இந்தப் பணத்தை எரித்ததாக நம்பப்படுகிறது.
எம்ஏசிசி அதிகாரிகள் குழு இருப்பதைக் கண்ட பிறகு, சந்தேக நபர் பல பண மூட்டைகளை எடுத்து அவற்றை எரித்து அப்புறப்படுத்த முயன்ற துணிச்சலான நடவடிக்கையை எடுத்ததாக நம்பப்படுகிறது.
வீட்டின் கதவை வெற்றிகரமாகத் திறந்து, சோதனை நடத்திய எம்ஏசிசி அதிகாரிகள் குளியலறையில் இருந்து அடர்த்தியான புகை வந்ததை கண்டனர்.
இதனைத் தொடர்ந்து குளியலறையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 100 ரிங்கிட் நோட்டுகள் கட்டுக்கட்டாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பின்னர் தலையணை பெட்டிக்குள் மறத்து வைக்கப்பட்டிருந்த 7.5 மில்லியன் ரிங்கிட் ரொக்கம், மூன்று ரோலக்ஸ், ஒமேகா, கார்டியர் கைக்கடிகாரங்கள், மோதிரங்கள், தங்க நாணயங்கள் போன்ற நகைகளில் கைப்பற்றியதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 19, 2025, 9:08 pm
ஜோ லோ ஷாங்காயில் இருப்பதாக மலேசியாவுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை: பிரதமர்
July 19, 2025, 9:08 pm
மக்களின் பணத்தை திருடவில்லை என்பதால் ராஜினாமா செய்ய மாட்டேன்: பிரதமர்
July 19, 2025, 5:04 pm
KLIA, ஜொகூர் சோதனைச் சாவடிகளில் தடங்கல்: ஆயிரக்கனக்கான பயணிகள் பாதிப்பு
July 19, 2025, 10:14 am
மறைந்த டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலுவிற்கு மஇகா மத்திய செயலவை மௌன அஞ்சலி
July 19, 2025, 10:12 am