
செய்திகள் மலேசியா
மறைந்த டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலுவிற்கு மஇகா மத்திய செயலவை மௌன அஞ்சலி
கோலாலம்பூர்:
மஇகா மத்திய செலவை கூட்டம் இன்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ் ஏ விக்னேஸ்வரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
மஇகா தேசிய தலைமையகக் கட்டடத்தில் கூட்டம் தொடங்கும் முன், மஇகா முன்னாள் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலுவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் மௌன அஞ்சலி செலுத்தினர்.
மஇகா சாதனைத் தலைவர் துன் சாமி வேலுவிற்கு பிறகு மஇகாவிற்கு தலைமையேற்று வழிநடத்தியவரும் சுற்றுச்சூழல் இயற்கை வளத்துறை முன்னாள் அமைச்சருமான பழனிவேலு அண்மையில் காலமானார்.
அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்றைய மத்திய செலவைக் கூட்டத்தில் அண்ணாருக்கு மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன், தேசிய உதவித் தலைவர்கள், மகளிர், இளைஞர் பிரிவுத் தலைவர்கள் உள்ளிட்ட மத்திய செயலவை உறுப்பினர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 19, 2025, 9:08 pm
ஜோ லோ ஷாங்காயில் இருப்பதாக மலேசியாவுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை: பிரதமர்
July 19, 2025, 9:08 pm
மக்களின் பணத்தை திருடவில்லை என்பதால் ராஜினாமா செய்ய மாட்டேன்: பிரதமர்
July 19, 2025, 5:04 pm
KLIA, ஜொகூர் சோதனைச் சாவடிகளில் தடங்கல்: ஆயிரக்கனக்கான பயணிகள் பாதிப்பு
July 19, 2025, 10:12 am