நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் எண்ணம் பிரதமருக்கு இல்லை: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் எண்ணம் பிரதமருக்கு இல்லை.

தகவல் தொடர்பு அமைச்சரும் கெஅடிலான் தகவல் பிரிவுத் தலைவருமான ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

கெஅடிலான் தலைவரான அவர் தொகுதித் தலைவர்கள்,  உறுப்பினர்கள் கொடுக்கும் கருத்துகளை மதிக்கிறார்.

கட்சியின் பலத்தை வலுப்படுத்த ஒன்றிணைந்து முன்னேறுமாறு அவர்  கேட்டுக் கொண்டுள்ளார்.

பல விஷயங்களில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கும் எண்ணம் அவருக்கு  இல்லை.

அவர்களுக்கு அந்தந்த கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை உண்டு.

மேலும் இந்த விஷயத்தைப் புரிந்துகொண்டு முன்னேறுமாறு தொகுதித் தலைவர்களையும் உறுப்பினர்களையும் பிரதமர் கேட்டுக் கொண்டதாக ஃபஹ்மி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset