நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிங்கப்பூரில் பன்னீர் செல்வத்தின் மரண தண்டனையை ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: புக்கிட் கெளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் கோரிக்கை 

கோலாலம்பூர்: 

சிங்கப்பூரில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள பன்னீர் செல்வத்தின் தண்டனையை ஒத்திவைக்க மலேசிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புக்கிட் கெளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் கோரிக்கையை முன்வைத்தார் 

சிங்கப்பூரில் இருக்கும் பன்னீர் செல்வம் மலேசியாவில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை அனுபவிக்கவும் அவரின் வழக்கினை விசாரணை செய்யவும் வழிவகுக்கும் வகையில் இந்த கோரிக்கையை தாமும் இதர மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்துவதாக அவர் சொன்னார் 

பன்னீர் செல்வம் மலேசியாவிற்கு வரவழைக்கப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு முறையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார். 

முன்னதாக, கடந்த 2017ஆம் ஆண்டு 51.84 கிரேம் போதைப் பொருள் சிங்கப்பூர் நாட்டிற்குக் கொண்டு சென்றதாக அவருக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டது. பன்னீர் செல்வம் போதைப்பொருள் அனுப்புநராக வேலை செய்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது 

சிங்கப்பூர் அரசு மலேசியப் பிரஜையான பன்னீர் செல்வத்திற்கு எதிராக மரண தண்டனையை விதிக்கக்கூடாது என்று தான் கேட்டுக்கொள்வதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset