
செய்திகள் மலேசியா
வணிகப் பரிவர்த்தனையின் போது கப்பல் நிறுவனங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்; சோதனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்: டத்தோஶ்ரீ ஜெயந்திரன்
கிள்ளான்:
வணிகப் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் போது கப்பல் நிறுவனங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அதே வேளையில் சோதனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று மேரிடைம் நெட்வோர்க் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டத்தோஶ்ரீ ஜெயந்திரன் ராமசாமி வலியுறுத்தினார்.
வணிகப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதற்கு முன்பு, பரிவர்த்தனையின் சட்டப்பூர்வத்தன்மையை உறுதி செய்யப்பட வேண்டும்.
கடல் துறை சார்ந்த நிறுவனங்கள் வாடிக்கையாளரின் அடையாளத்தைச் சரிபார்க்க வேண்டும்.
கண்டறியப்படாத குற்றச் செயல்களில், குறிப்பாக நிதி மோசடி, பணமோசடியில் ஈடுபடும் அபாயத்தைக் குறைக்கப்பட வேண்டும்.
குறிப்பாக பங்காளிகள், முக்கிய கட்சி இடைத்தரகர்கள் தடுக்கப்பட வேண்டும்.
கப்பல் முகவரின் அடையாளம், இறுதிப் பணப் பரிமாற்றத்தின் ஆதாரம் உள்ளிட்ட பரிவர்த்தனை விவரங்களைச் சரிபார்க்காமல் நீண்டகால வணிக உறவுகளை நம்பக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
அனைத்து கப்பல் முகவர்களும் இந்த விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஏனெனில் நிதி அவர்களின் நிறுவனக் கணக்குகளில் சேரும். மேலும் அவர்களின் செயல்களுக்கு அவர்களே பொறுப்பு என்று அவர் விளக்கினார்.
இந்த விவகாரத்தில் கன்மூடித்தனமாக இருக்க கூடாது. அதனால் சோதனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.
பரிவர்த்தனைகளில் ஏதும் சந்தேகம் இருந்தால் அது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இத்துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் கொண்ட டத்தோஶ்ரீ ஜெயந்திரன் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 1:47 pm
தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி; 100 அணிகள் பங்கேற்றுள்ளன: பத்துமலை
July 12, 2025, 12:18 pm
மலாக்காவில் ரிக்ஷா சேவைக்கு இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்
July 12, 2025, 11:28 am
இணைய மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
July 12, 2025, 10:52 am