
செய்திகள் மலேசியா
பத்துமலைக்குப் பிரதமரின் வருகை மடானி அரசாங்கத்தின் அக்கறையை புலப்படுத்துகிறது: கோபிந்த் சிங்
பத்துமலை:
பத்துமலைக்குப் பிரதமரின் வருகை மக்கள் மீதான மடானி அரசாங்கத்தின் அக்கறையை புலப்படுத்துகிறது.
இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ இதனை கூறினார்.
தைப்பூசத் திருநாள் கொண்டாட்டம் என்பது நமது நாட்டுக்கே உண்டான தனித்துவம் ஆகும்.
இரு வாரங்களூக்கு முன்பே பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்த ஆரம்பித்துவிட்டனர்.
இன்று நான் பத்துமலை சென்றிருந்த போதும் கூட பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை பொறுமையாகவும், பக்தியுடனும் செலுத்துவதை கண்டேன்.
பிரதமர் அன்வார் இப்ராஹிமின் இன்றைய பத்துமலைக்கான வருகை, நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த மடானி அரசாங்கத்தின் வழி தாம் கொண்டுள்ள உறுதிபாட்டை புலப்படுத்துகிறது.
இந்த வருகையின் போது, அன்வார் இப்ராஹிம் மாரியம்மன் கோவில் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா, தேவஸ்தான முக்கிய உறுப்பினர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களோடு கலந்துரையாடினார்.
தேவஸ்தான செயலவையினர் முன் வைத்த கோரிக்கைகளுக்கு மத்திய அரசு, சிலாங்கூர் மாநில அரசுடன் இணைந்து உதவும் என பிரதமர் உத்தரவாதம் அளித்தார்.
ஆலயம் சமூக சேவை மையமாகச் செயல்பட புதிய மண்டபம் கட்டுவதற்கு வசதிகள் செய்து தரப்படும் எனவும் பிரதமர் கூறினார்.
தைப்பூசத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு, இரண்டு பெரிய மின்னியல் திரையை பினாங்கு தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்குத் தாம் வழங்கவிருப்பதாக அமைச்சர் கோபிந் சிங் டியோ கூறினார்.
இந்த மின்னியல் திரையின் வழி தைப்பூசத்திற்கு வரும் பக்தர்கள் தூரத்திலிருந்தே ஆலயத்தில் நடைபெறும் பூஜைகள் தொடர்பான காணொலிகளை கண்டுகளிக்கலாம்.
பல்லின வாழும் மலேசியாவில், நல்லிணக்கத்தைக் கொண்டாடும் மடானி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, இந்தியர்களின் நலன் காக்கவும், அவர்களது நம்பிக்கைக்கு மதிப்பளிக்கவும் இலக்கவியல் அமைச்சு மேற்கொள்ளும் முயற்களில் இதும் ஒன்றாகும்.
அதோடு இந்திய சமுதாயம் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், மின்னியல் வணிகத்தில் ஈடுபட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது.
அதிவளர்ச்சி காணும் மின்னியல் பொருளாதாரம் இந்தியர்கள் பின் தங்விடக்கூடாது என இலக்கவியல் அமைச்சு கருதுகிறது.
கடந்த ஆண்டு இலக்கவியல் அமைச்சு, இந்தியர்களின் மேம்பாட்டுக்குக் கனிசமான தொகையை வழங்கியது.
ஆலய மேம்பாட்டுப் பணிகள், இந்திய அரசு சார்பற்ற இயக்கங்களுக்கு நிதி உதவி, தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி உதவி என கடந்த ஆண்டு வழங்கியது போலவே, இந்த ஆண்டும் இந்தியர்களுக்கு வழங்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 12:52 pm
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
May 9, 2025, 12:51 pm
செமின்யேவில் உள்ள வீட்டில் கொள்ளை: ஐந்து சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது
May 9, 2025, 11:59 am
பிளஸ் நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்து: இரு பெண்கள் பலி
May 9, 2025, 10:51 am
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி இணைந்து பணியாற்ற தயார்
May 9, 2025, 10:22 am