நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முஸ்லிம்களுக்கான புதிய வழிகாட்டல்களை அமைச்சரவை ரத்து செய்தது; சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது: டத்தோஸ்ரீ சரவணன்

பத்துமலை:

முஸ்லிம்களுக்கான புதிய வழிகாட்டல்களை ரத்து செய்த  அமைச்சரவையின் நடவடிக்கை சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் சிறப்பு வருகை மேற்கொண்டு பத்துமலைக்கு வருகை தந்தார்.

இந்த வருகையின் போது பத்துமலையில் மேற்கொள்ளப்படவிருக்கும் மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் முழு ஆதரவு வழங்கும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

இதற்காக மலேசிய இந்தியர்களின் சார்பாக பிரதமருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அதை விட முக்கியமாக முஸ்லிம்கள் அல்லாத வழிபாட்டு தலங்கள், இறுதி சடங்குகளில் முஸ்லிம்கள் கலந்து கொள்ள அனுமதி பெற வேண்டும் என்று முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்களை   அமைச்சரவை இன்று ரத்து செய்தது.

முஸ்லிம்களுக்கு இந்த வழிகாட்டல் தேவையில்லை என பிரதமர் கூறியுள்ளார்.

இதன் மூலம் நாட்டில் இன்னும் இறையான்மை வாழ்கிறது என்பதை காட்டுகிறது.

மேலும் சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு இது அமைந்துள்ளது.

ஆகவே இம்முடிவை எடுத்த அமைச்சரவைக்கும் அதற்கு தலைமையேற்ற பிரதமருக்கும் நன்றி என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset