நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

99 ஸ்பீட்மார்ட் நிறுவனர் இப்போது மலேசியாவின் ஏழாவது பணக்காரராக உருவெடுத்துள்ளார்

கோலாலம்பூர்:

99 ஸ்பீட்மார்ட் நிறுவனர் இப்போது மலேசியாவின் ஏழாவது பணக்காரராக உருவெடுத்துள்ளார்.

99 ஸ்பீட்மார்ட் சில்லறை விற்பனைச் சங்கிலியின் நிறுவனராக லீ தியாம் வா விளங்குகிறார்.

மலேசியாவின் 10 பணக்காரர்களில் ஒருவராக, 17.6 பில்லியன் சொத்துக்களையும் அவர் கொண்டுள்ளார்.

2024ஆம் ஆண்டு நன்யாங் சியாங் பாவ் பணக்கார தனிநபர்கள் பட்டியலின்படி அவர் ஏழாவது இடத்திற்கு   உருவெடுத்துள்ளார்.

99 ஸ்பீட்மார்ட்டில் 83 சதவீத பங்குகளை வைத்திருக்கும் தியாம் வாவின் சொத்து மதிப்பு, 

கடந்த ஆண்டு நிறுவனத்தின் ஆரம்ப பொதுப் பட்டியலுக்குப் பிறகு உயர்ந்தது.

இந்தப் பட்டியல் முடிவுகள் தியாம் வாவை மலேசியாவின் ஏழாவது பணக்காரராக  உயர்ந்துள்ளார்.

இதனிடையே ​​99 ஸ்பீட்மார்ட் தற்போது நாடு முழுவதும் 2,600க்கும் மேற்பட்ட கிளைகளை இயக்குகிறது.

மேலும் 2025ஆம் ஆண்டுக்குள் 3,000 கிளைகளை அடைய இலக்கு வைத்துள்ளது.

அதே வேளையில் இந்நிறுவனம் தனது செயல்பாடுகளை இந்தோனேசியா மற்றும் தாய்லாந்திற்கும் விரிவுபடுத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset