நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பின் வீட்டுக் காவல் தொடர்பான முடிவை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்: ஏஜிசி 

கோலாலம்பூர்:

டத்தோஸ்ரீ நஜிப்பின் வீட்டுக் காவல் தொடர்பான முடிவை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்.

தேசிய சட்டத் துறை தலைவர் அலுவலகம் (ஏஜிசி) இதனை தெரிவித்தது.

கூடுதல் உத்தரவு தொடர்பான நஜிப் ரசாக்கின் நீதித்துறை மறுஆய்வு விண்ணப்பத்தை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பை தவறாகப் புரிந்து கொள்வதன் மூலம் பொது ஒழுங்கைத் தூண்டி சீர்குலைக்க முயற்சிக்கும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் எதிராக ஏஜிசி எச்சரித்துள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் பொருத்தமற்றவை.

மேலும் முன்னாள் பிரதமரின் மேல்முறையீட்டை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியது.

நஜிப்பின் விண்ணப்பத்தை நிராகரித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மாமன்னர், மலாய் ஆட்சியாளர்கள் ஆகியோரின் மன்னிப்பு விஷயங்களில் அதிகாரத்தைக் குறைத்துவிட்டது என்ற கூற்றுகளையும் ஏஜிசி மறுத்தது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset