நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வழிப்பறி கொள்ளை வழக்கில் மருமகன், மாமனார் கைது

அலோர் ஸ்டார்:

வழிப்பறி கொள்ளை வழக்கில் மருமகனும் மாமனாரும் கைது செய்யப்பட்டனர்.

கெடா மாநில போலிஸ் தலைவர் டத்தோ அட்லி அபு ஷா இதனை கூறினார்.

கடந்த சனிக்கிழமை வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் சம்பந்தப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இரவு 11 மணியளவில் அல் புகாரி பள்ளிவாசலில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த உள்ளூர் நபர் ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டதாக தான்சானிய பெண் மாணவியிடமிருந்து போலிசாருக்கு புகார் கிடைத்தது.

அந்த புகாரின் பேரில் டிசம்பர் 20ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் கெடா போலிஸ் அதிகாரிகள், ஜாலான் கோட்டா தனாவில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்தது.

இச்சோதனில்  அதிகாரிகள் இரண்டு பேரை வெற்றிகரமாக கைது செய்தனர். அவர்களில் ஒருவர் 23 வயதுடையவர். 

அவர் போதைப்பொருள் தொடர்பான மூன்று முந்தைய குற்றப் பதிவுகளைக் கொண்டவர்.

மேலும் கேபிள் திருட்டு,  போதைப்பொருள் வைத்திருந்தது தொடர்பான 12 முந்தைய குற்றப் பதிவுகளைக் கொண்ட 46 வயது நபரும் கைதானார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset