நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு சுரங்கப்பாதை தொடர்பான தீர்ப்பை கொண்டாட நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்: முஹம்மத் ஹசான்

கோலாலம்பூர்:

பினாங்கு சுரங்கப்பாதை தொடர்பான தீர்ப்பை கொண்டாட நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதனை கூறினார்.

டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் காஜாங் சிறையில் இருக்க வேண்டும் என்ற முடிவை கொண்டாடிய ஜசெகவின் இயோ பீ யின் அறிக்கையைத் தொடர்ந்து, 

இன்று வெளியுறவு அமைச்சருமான அவர் இயோவை கடுமையாக சாடினார்.

மேலும் அடுத்த ஆண்டு திறக்கப்படவுள்ள பினாங்கு சுரங்கப்பாதைத் திட்டம் தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பை நானும் கொண்டாட ஆவலுடன் இருப்பதாக கூறினார்.

முன்னதாக பினாங்கு சுரங்கப்பாதை என்பது ஜசெக ஆலோசகர் லிம் குவான் எங் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கில் சிக்கியுள்ள 6.7 பில்லியன் ரிங்கிட் கடலுக்கடியில் சுரங்கப்பாதை,  பிரதான சாலைத் திட்டத்தைக் குறிப்பதாக நம்பப்படுகிறது

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset