நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழரின் பெருமைமிகு மன்னர் இராஜ ராஜ சோழனின் விழா; ஜன. 25ஆம் தேதி தலைநகரில் நடைபெறும்: டத்தோ ராமன்

கோலாலம்பூர்: 

தமிழரின் பெருமைமிகு மன்னர் இராஜ ராஜ சோழனின் விழா வரும் ஜனவரி 25ஆம் தேதி தலைநகரில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவின் ஏற்பாட்டுக் குழு தலைவர் டத்தோ ராமன் இதனை கூறினார்.

இராஜ ராஜ சோழன் (முதலாம் இராஜராஜன்) சோழப் பேரரசின் மிகச்சிறந்த மன்னர்களில் ஒருவராக வலம் வந்தவர். இவரது இயற்பெயர் அருண்மொழி வர்மன். தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து, சோழப் பேரரசை விரிவுபடுத்தி, கலை, நிர்வாகத்தில் சிறந்து விளங்கினார்.

தஞ்சைப் பெரிய கோவிலை கட்டியதும் இவரே. இவரது ஆட்சிக்காலம் "தமிழகத்தின் பொற்காலம்" எனப் போற்றப்படுகிறது.

இராஜ ராஜ சோழனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வரும் ஜனவரி 25 ஆம் தேதி தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் டெம்பள் ஆஃப்  பைன் ஆர்ட்ஸ் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் விழா நடைபெறவுள்ளது.

பிற்பகல் இரண்டு மணிக்கு மேல் தொடங்கும் இந்த விழாவில் தமிழ் நாட்டைச் சேர்ந்த  சொல்வேந்தர் என அழைக்கப்படும் சுகி சிவம் அவர்கள் இராஜ ராஜ சோழனின் வரலாற்று பெருமையை பற்றி பேசுவார்.

அதேபோல் மலேசியாவைச் சேர்ந்த சிறந்த பேச்சாளர் பாண்டித்துரை அவர்கள் கடாரம் கொண்டான் என்ற தலைப்பில் இராஜ ராஜ சோழனை பற்றி பேசுவார்.

ம இகா தேசிய துணை தலைவர், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்கள் இந்த விழாவுக்கு தலைமை ஏற்கிறார்.

சுமார் 600 பேர் அமரும் இந்த மண்டபத்தில் தற்போது 100 வெள்ளி மற்றும் 250 வெள்ளி என்று டிக்கெட் விற்கப்படுகின்றன என்று அவர் சொன்னார்.

இராஜ ராஜ சோழன் ஒரு வரலாற்று நாயகன் மட்டுமில்லாமல் தமிழ் இனத்தின் மாபெரும் அரசனாக விளங்கியவர்.

இவர் கட்டிய தஞ்சை பெரிய கோவில் இன்னமும் உலக வரலாற்றில் ஒரு பொக்கிஷமாக விளங்குகிறது.

இராஜ ராஜ சோழனின் வரலாற்று பெருமையை மலேசியத் தமிழர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த விழா மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset