நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பகாங்கில் வெள்ளம் தணிகிறது: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது

குவாந்தான்:

பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை புதன்கிழமை மாலை 3.30 மணியளவில் 79 ஆக குறைந்துள்ளது. இவர்கள் 27 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நான்கு தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக= தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று மாலை நிலவரப்படி, ஐந்து நிவாரண மையங்களில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 86 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

சமூக நலத் துறையின் இன்பொ பென்சனா (Infobencana) செயலியின் தகவலின்படி, குவாந்தான் பகுதியில் உள்ள கம்போங் செமங்காட் சமூக மண்டபத்தில் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, மாரானில் உள்ள கம்போங் பாரு பெர்டானியன் சமூக மண்டபத்தில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் இன்னும் தங்கியுள்ளனர். 

வெள்ளத்தில் பாத்திக்கப்பட்டவர்களின் 17 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் இரண்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இன்பொ பென்சனா (Infobencana) இணையதளத்தின் தகவலின்படி, பாலோ ஹினாய், பெக்கானில் உள்ள பகாங் நதி, இன்று காலை 8 மணி நிலவரப்படி இன்னும் அபாய மட்டத்திற்கு மேல் நீடித்து வருகிறது.

கடந்த வாரம் பெய்த தொடர் கனமழை காரணமாக, பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டதுடன், வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,000-ஆக கடந்திருந்தது.

- கிருத்திகா
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset