நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எட்டு மாநிலங்கள் எஸ்எஸ்பிஎன் சேமிப்புகளை ஆதரிப்பது உயர் கல்விக்கான பிடிபிடிஎன்னின் அர்ப்பணிப்பை காட்டுகிறது

கோலாலம்பூர்:

எட்டு மாநிலங்கள் எஸ்எஸ்பிஎன் சேமிப்புகளை ஆதரிப்பது உயர் கல்விக்கான பிடிபிடிஎன்னின்  அர்ப்பணிப்பைப் காட்டுகிறது.

பிடிபிடிஎன் தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிசா அப்துல் ரஹிம் இதனை கூறினார்.

பிடிபிடிஎன் எனும்  தேசிய உயர்கல்வி நிதிக் கழகம்  எஸ்எஸ்பிஎன் சேமிப்பு முயற்சி,  பிடிபிடிஎன் கடன் திருப்பிச் செலுத்துதலை எட்டு மாநில அரசுகள் ஆதரித்துள்ளன.

இது  நாட்டின் உயர் கல்வி நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக உள்ளது.
ஜொகூர், சிலாங்கூர், சரவா, பேரா, மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங், சபா ஆகிய மாநில அரசுகள் தங்கள் 2026 மாநில பட்ஜெட்டுகளை தாக்கல் செய்வதன் மூலம் இந்த உறுதிப்பாட்டை அறிவித்ததற்கு பிடிபிடிஎன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும்  கல்வி மூலம் மனித மூலதன மேம்பாட்டிற்கு தீவிர முக்கியத்துவம் அளிக்கும் மாநில அரசின் அக்கறையின் வெளிப்பாடாக இந்த அறிவிப்பைக் கண்டதாக அவர் கூறினார்.

அறிவிக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள், கல்விச் சூழலை உள்ளடக்கிய, நிலையான முறையில் வலுப்படுத்துவதில் மாநில அரசின் உறுதியை தெளிவாகக் காட்டுகின்றன

மாநில அரசுக்கும் பிடிபிடிஎன்னுக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பின் மூலம், அதிகமான மாணவர்கள் பயனடைவார்கள்,

இதனால் நாட்டின் எதிர்காலத்திற்கு அறிவு மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த தலைமுறையை உருவாக்குவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset