நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் மீது மோதியது: ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகனமோட்டி காயம்

உலு திரங்கானு: 

உலு திரங்கானுவில், கோலா பெராங்–தாஜின்–டெலிமாங் சாலையின் 17ஆவது கிலோமீட்டரில், ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து வீடு ஒன்றின்மீதுமோதியதில், 21 வயதுடைய இளைஞர் ஒருவரின் முகத்திலும், தலை பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

உலு திரங்கானு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷருதீன் அப்துல் வஹாப் தெரிவித்ததாவது, இந்த விபத்து செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 8.30 மணியளவில் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்டவர், டெலிமாங் பகுதியில் இருந்து தஞ்சோங் புடாட் நோக்கி புரோட்டான் பிரீவ் காரில் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணையில்,  கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறமாக, கம்புங் செப்போ, டெலிமோங் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது மோதியதாக தெரிய வந்துள்ளது.

தொழிற்சாலை மேற்பார்வையாளராக பணிபுரியும் 21 வயதுடைய அந்த இளைஞர், விபத்தின் காரணமாக முகம்,  தலை பகுதிகளில்  காயமடைந்துள்ளார்.
அவரை உடனடியாக உலு திரங்கானு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனைக்கு (HSNZ) மாற்றியமைக்கப்பட்டதாக ஷருதீன்தெரிவித்தார்.

இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட கார் முன்புறத்தில் கடுமையாக சேதமடைந்ததுடன், மோதப்பட்ட வீட்டின் கூரையும், சுவர்களும் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட ஓட்டுநருக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் ஈடுபட்ட வாகனம், மேலதிக ஆய்வுக்காக புஷ்பாகோம் (Puspakom) வாகன பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்படும் என்றும், இந்த வழக்கு 1987  43(1), சாலை போக்குவரத்து சட்டத்தின் பிரிவு கீழ் விசாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

- கிருத்திகா
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset