நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

என் அப்பாவை பற்றி எனக்கு தெரியும்; அவர் எளிதாக தோற்று விட மாட்டார்: நஜிபுடின்

கோலாலம்பூர்:

என் அப்பாவை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர் எளிதாக தோற்று விட மாட்டார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் மகன் டத்தோ முஹம்மத் நஜிபுடின் இதனை கூறினார்.

எனது தந்தைக்காக கூடுதல் உத்தரவு செல்லாது என்றும், இந்த நாட்டில் வீட்டுக் காவலில் வைக்க அதை செயல்படுத்த முடியாது என்றும் நேற்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பு பெரும் வருத்தத்தை அளிக்கிறது. 

குறிப்பாக இந்த முடிவு அவரது தந்தையை உள்ளடக்கியதால் மட்டுமல்ல, மாறாக மாமன்னரின் உத்தரவை நேரடியாகப் பாதித்துள்ளது.

என் அப்பாவை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் எதையும் எளிதாக கைவிட மாட்டார். அவர் தொடர்ந்து போராடுவார். 

ஆனால் நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தடையும் சோதனையும் பார்க்கும்போது இதெல்லாம் எப்போது முடிவடையும் என்று நான் யோசிக்காமல் இருக்க முடியவில்லை?.

அவர்களுக்கு இது எப்போது போதுமானதாகக் கருதப்படும்? நேற்றைய முடிவு எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

என் தந்தையால் மட்டுமல்ல, அந்த முடிவின் பின்னணியில் உள்ள அர்த்தத்தாலும் பல தசாப்தங்களாக, அம்னோ மிக உயர்ந்த கொள்கைகளுக்காகப் போராடி வருகிறது.

மலாய் ஆட்சியாளர்களின் இறையாண்மையை நிலைநிறுத்தி, பேரரசரின் ஒவ்வொரு கட்டளைக்கும் ஒப்புதலுக்கும் கீழ்ப்படிகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset