நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய முஸ்லிம்களுக்கு எந்தவொரு வழிகாட்டல்களும் தேவை இல்லை: பிரதமர் அன்வார்

பத்துமலை:

மலேசிய முஸ்லிம்களுக்கு எந்தவொரு வழிகாட்டல்களும் புதிய விதிகளும் தேவையில்லை.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

முஸ்லிம்கள் அல்லாத வழிபாட்டு தலங்கள், இறுதி சடங்குகளில் முஸ்லிம்கள் கலந்து கொள்ள அனுமதி பெற வேண்டும் என்று முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்களை   அமைச்சரவை இன்று ரத்து செய்தது.

பத்துமலைக்கு வருகை தந்த பிரதமரிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பிரதமர், மலேசிய முஸ்லிம்களுக்கு எந்தவொரு வழிகாட்டல்களும் புதிய விதிகளும் தேவையில்லை.

முஸ்லிம் மக்கள் எல்லாம் அறிந்தவர்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset