நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அனைத்து விமான நிலையங்களிலும் பறவைகளைக் கண்டறியும் கருவிகள் தேவை

சியோல்:

தென் கொரியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் பறவைகளைக் கண்டறியும் கேமராக்களும் ரேடார்களும் பொருத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி நேர்ந்த Jeju Air விமான விபத்தை  அடுத்து அந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

179 பேர் மாண்ட விபத்து எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. 

அதற்குப் பறவைகள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

விமானத்தின் இயந்திரத்தில் பறவையின் சிறகுகளும் ரத்தமும் காணப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில் விமான நிலையங்களில் கேமராக்களும் ரேடார்களும் நிறுவப்பட்டால் பறவைகளை முன்கூட்டியே அடையாளம் காணமுடியும் என்றும் விபத்துகளைத் தவிர்க்கமுடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset