செய்திகள் உலகம்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பணியாளரைத் துன்புறுத்திய இரு பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பணியாளரை வாய்மொழியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்திய இரு பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்தச் சம்பவம் நேற்று நிகழ்ந்ததாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
SQ826 விமானப் பணியாளரை வாய்மொழியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்திய இரு பயணிகளின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
விமானம் நேற்று அதிகாலை 1.15 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து ஷாங்காய்க்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது.
இச்சம்பவத்தால் விமானம் 1 மணி நேரம் 46 நிமிடங்கள் தாமதமாகி, அதிகாலை 3.01 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட்டது.
மேலும் இந்த சம்பவத்தால் ஏற்பட்ட சிரமத்திற்கு விமானத்தில் இருந்த பணியாளர்களிடம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மன்னிப்பு கேட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 17, 2025, 10:58 pm
MalaysiaNow ஊடகத்தளத்திற்குத் தடை விதித்தது சிங்கப்பூர்
November 16, 2025, 9:11 pm
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சியில் பெரும் விரிசல்: டெய்லர் கிரீனுடன் மோதல் முற்றுகிறது
November 16, 2025, 9:49 am
ஜப்பானுக்குச் செல்லாதீர்கள்: சீனர்களை எச்சரிக்கும் சீனா
November 15, 2025, 4:12 pm
மாட்டிறைச்சி, காபிக்கு வரிவிலக்கு: டிரம்ப் அறிவிப்பு
November 15, 2025, 4:01 pm
MalaysiaNow நாளேட்டுக்குச் சிங்கப்பூர் POFMA சட்டத்தின்கீழ் திருத்த உத்தரவு
November 14, 2025, 3:31 pm
தைவான் குறித்த கருத்துகளை ஜப்பான் திரும்பப் பெற வேண்டும்: சீனா எச்சரிக்கை
November 14, 2025, 2:03 pm
இந்திய நிறுவனத்துக்கு பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா
November 13, 2025, 11:16 am
