நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலிருந்து அமெரிக்கா விலகல்

நியூயார்க்: 

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம், அந்த அமைப்புக்கு அமெரிக்கா நிதியுதவி அளிப்பது முழுமையாக நிறுத்தப்படுகிறது.

மூன்றாவது உலக போர் தொடங்குவதை தடுக்கவும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டவும் ஐ.நா.வுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது.

அந்த அமைப்பில் உள்ள சில துணை அமைப்புகள் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன என அமெரிக்கா குற்றம்சாட்டியது.

ஆகையால், மனித உரிமைகளுக்கான ஐ.நா. பிரிவில் இருந்து அமெரிக்கா விலகுகிறது. யுஎன்ஆர்டபிள்யுஏவுக்கு இனிமேலும் நிதியுதவி அளிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset