
செய்திகள் உலகம்
காஷ்மீர் உள்பட அனைத்து பிரச்சனைகளுக்கு பேச்சு மூலம் தீர்வு: பாகிஸ்தான் விருப்பம்
இஸ்லாமாபாத்:
காஷ்மீர் பிரச்சனை உள்பட இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சட்டப்பேரவை சிறப்பு அமர்வில் உரையாற்றிய அவர், 2019-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்தை தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களில் இருந்து விடுபட்டு, ஐ.நா.வுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும்.
1999ம் ஆண்டு லாகூர் பிரகடனத்தில் குறிப்பிட்டிருப்பது போல, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் பிரச்சனைகளை தீர்க்க இருக்கும் ஒரே வழி பேச்சுவார்த்தை மட்டுமே.
ஆனால், இந்தியா ஆயுதங்களை குவிக்கிறது. ஆயுதக் குவிப்பு ஒருபோதும் அமைதிக்கு வழிவகுக்காது.
காஷ்மீர் பிரச்னைக்கு ஒரே தீர்வானது, ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட சுயநிர்ணய உரிமையே ஆகும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am
உலகளாவிய வணிகப் பிரிவில் கூகுள் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது
May 7, 2025, 5:33 pm
ஸ்காட்லாந்தில் உலகின் பழமையான கால்பந்து மைதானம் கண்டுபிடிப்பு
May 7, 2025, 3:50 pm
இந்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததுடன் 46 பேர் காயமடைந்தனர்: பாகிஸ்தான் அறிவிப்பு
May 6, 2025, 4:03 pm