நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மற்ற இனங்களின் வழிப்பாட்டுத் தலங்களில் நிகழும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முஸ்லிம்களுக்கான வழிகாட்டுதல்களை ஜாக்கிம் முடிவு செய்யும்: நயிம் மொக்தார்

கோலாலம்பூர்: 

மற்ற இனங்களின் வழிப்பாட்டுத் தலங்களில் நிகழும் நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் பங்கேற்பது குறித்த வழிகாட்டுதல்களை மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை, ஜாக்கிம் முடிவு செய்யும் என்று பிரதமர் துறையின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோ முஹம்மத் நயிம் மொக்தார் கூறினார். 

இந்த வழிகாட்டுதல்கள் முஸ்லிம்களின் உணர்வுகளைப் பாதுகாப்பதை உறுதி செய்யும். 

பிரச்சாரம், மத அறிக்கைகளை விநியோகித்தல், இஸ்லாமிய நம்பிக்கைகளை அவமதிக்கும் அல்லது கேலி செய்யும் நிகழ்ச்சிகள் அல்லது அறிக்கைகள் ஆகியவற்றை இதன் மூலம் தவிர்க்க இயலும்.

மேலும், மற்ற நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை தொழுகைகள் போன்ற இஸ்லாமிய மதக் கடமைகளுடன் ஒத்துப் போவதை அரசு உறுதி செய்யும் என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset