நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காசா குறித்த மலேசியாவின் நிலைப்பாடு மற்ற இஸ்லாமிய நாடுகளைப் போலவே உள்ளது: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்: 

பாலஸ்தீனத்தின் காசாவில் தற்போதைய நிலைமை குறித்து மலேசியாவின் நிலைப்பாடு பொதுவாக மற்ற இஸ்லாமிய நாடுகளைப் போலவே உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

பாலஸ்தீனியர்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்த பிறகு, காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்ததைத் தொடர்ந்து பிரதமர் இதைக் கூறினார்.

டிரம்பின் அறிக்கையை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். அது குறித்துப்பின்னர் கருத்து தெரிவிப்போம் என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

பாலஸ்தீனியர்கள் மற்ற நாடுகளுக்கு வெளியேற்றப்பட்ட பிறகு, காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று தெரிவித்தார். 

இந்த நடவடிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தொடர்பான பல தசாப்த கால அமெரிக்க கொள்கையை 'அழிக்கும்' நடவடிக்கையாகும்.

வாஷிங்டனில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஒரு செய்தியாளர் சந்திப்பில், குறிப்பிட்ட விவரங்களை வழங்காமல், டிரம்ப் தனது அதிர்ச்சியூட்டும் திட்டத்தை வெளியிட்டார் என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset