நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஏப்ரல் மாதம் ஆண்டின் மிக வெப்பமான மாதமாக இருக்கலாம்: மெட்மலேசியா எச்சரிக்கை 

பெட்டாலிங் ஜெயா: 

ஏப்ரல் மாதம் இவ்வாண்டின் வெப்பமான மாதமாக இருக்கலாம் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

குறிப்பாக வட மாநிலங்கள், கிளந்தான், பகாங் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்கள் அதிக வெப்பத்தை மக்கள் உணரக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிப்ரவரி மாதத் தொடக்கத்தில், வெப்பமான வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுகிறது என்றும், வடகிழக்கு பருவமழை அதன் இறுதி கட்டத்தை எட்டும்போது வெப்ப அலை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.

லா நினா பருவ நிலை காரணமாக 2024 உடன் ஒப்பிடும்போது வெப்ப நிலை குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக மெட்மலேசியா தெரிவித்துள்ளது. 

பெர்லிஸ், கெடா மற்றும் வடக்கு பேராக் போன்ற வட மாநிலங்களில் வெப்பமான மற்றும் வறண்ட வானிலை பொதுவாகக் காணப்படும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset