செய்திகள் மலேசியா
கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை 3 திட்டம் இன்னும் பரிசீலனையில் உள்ளது: அஹமத் மஸ்லான்
கோலாலம்பூர்:
சுமார் 980 கோடி வெள்ளி மதிப்பிலான கிழக்குக் கடற்கரை விரைவுச்சாலை திட்டம், எல்.பி.டி.3) இன்னும் பரிசீலனையில் இருப்பதாகப் பொதுப்பணி துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ அஹமத் மஸ்லான் கூறினார்.
இது குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று அவர் இன்று மக்களவையில் தெரிவித்தார்.
கோல திரெங்கானுவின் கம்போங் கெமுரோ, கிளந்தான் மாநிலத்தின் கோத்தா பாருவிலுள்ள கம்போங் துஞ்சோங்கை இணைக்கும் இந்த டோல் கட்டண விரைவுச்சாலை நிர்மாணிப்பு குறித்து விரிவான மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்திற்கான குத்தகை இன்னும் வழங்கப்படவில்லை.
பரிந்துரை கோரிக்கை நடைமுறையை முதலில் செயல்படுத்த வேண்டியுள்ளது. அதே சமயம், ஒப்பந்த நிறுவனத்தின் நலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
அந்த விரைவுச்சாலையின் தொடக்கம் முதல் இறுதி வரையிலான பகுதிக்கு விதிக்கப்படும் 70 வெள்ளி டோல் கட்டணம் பொருத்தமானதா என்பதையும் ஆராய வேண்டியுள்ளது என்று அவர்
விளக்கினார்.
தற்போது நாட்டிலுள்ள 33 டோல் கட்டண ஒப்பந்த நிறுவனங்கள் அனைத்தும் லாபத்தை ஈட்டவில்லை. சில நிறுவனங்கள் இழப்பை எதிர்நோக்கி வருகின்றன.
அதன் காரணமாகவே எல்.பி.டி.3 திட்டம் குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்று மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது அவர் குறிப்பிட்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 5:52 pm
குவாந்தான் ஜெராம் தோட்ட தமிழ்ப்பள்ளியின் தலை விதியை பிரதமர் காப்பாரா?: டத்தோ கலைவாணர் கேள்வி
February 5, 2025, 5:43 pm
காசா குறித்த மலேசியாவின் நிலைப்பாடு மற்ற இஸ்லாமிய நாடுகளைப் போலவே உள்ளது: பிரதமர் அன்வார்
February 5, 2025, 4:19 pm
வர்த்தகப் போரால் மலேசியாவின் உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி பாதிக்கப்படாது: ரஃபிசி ரம்லி
February 5, 2025, 4:18 pm