நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வர்த்தகப் போரால் மலேசியாவின் உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி பாதிக்கப்படாது: ரஃபிசி ரம்லி 

கோலாலம்பூர்: 

சர்வதேச வர்த்தகப் போரால் மலேசியாவின் உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி பாதிக்கப்படாது என்று பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரஃபிசி ரம்லி கூறினார்.

கடந்த ஒரு மாதமாக, மலேசியாவின் நடுத்தர, நீண்ட கால  உள்நாட்டு உற்பத்தி வாய்ப்புகளில் எந்த மாற்றங்களும் நிகழவில்லை. 

மேலும், கடந்த வாரத்தில் ரிங்கிட்டின் மதிப்பும்  வலுப்பெற்றுள்ளது.

இருப்பினும், அரசாங்கம் வர்த்தகப் போரால் நிகழும் எதிர்வினைகளைக் கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

2025-ஆம் ஆண்டில் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5% முதல் 5.5% வரை வளரும் என்று நிதி அமைச்சகம் கணித்துள்ளது.

வர்த்தகப் போர் உலகப் பொருளாதாரத்தின் நிரந்தர அம்சமாகவே இருக்கும் என்றும், அதனால் ஏற்படும்  நிலையற்ற தன்மையை மலேசியா தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset